76% ஏர் இந்தியா பங்குகளை விற்க மத்திய அரசு தயார்

  SRK   | Last Modified : 28 Mar, 2018 10:34 pm


ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்கும் முயற்சியில், அதன் 76% பங்குகளை விற்க மத்திய அரசு முன்வந்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க மத்திய அரசு பல மாதங்களாக முயற்சி செய்துவருகிறது. இதற்காக சர்வதேச நிறுவனம் ஒன்றை ஆலோசகர்களாக மத்திய அரசு நியமித்துள்ளது. மேலும், 76% ஏர் இந்தியா பங்குகளை விற்கவும் மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 

போட்டிமுறை மூலம் ஏர் இந்தியா பங்குகளின் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் நஷ்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏர் இந்தியாவின் சேவைத்தரம் குறைந்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏர் இந்தியாவை நடத்த வரிப்பணத்தை மத்திய அரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அதனால், தனியார் நிறுவனத்திடம் அதை விற்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. 2016-17 வர்த்தக ஆண்டு முடிவில், ரூ.48,876 கோடி நஷ்டத்தில் இருந்தது ஏர் இந்தியா. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close