வாட்ஸ்ஆப் தலைமை அதிகாரியாக இந்தியர்?

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 07:12 pm


வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

வாட்ஸ்ஆப் நிறுவனத்தில் இணை நிறுவனராக இருந்த ஜான் கௌம் இரு தினங்களுக்கு முன் பதவி விலகினார். பேஸ்புக் விவகாரத்தில் அவரது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என கூறி பதவி விலகுவதாக அவர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் வாட்ஸ்ஆப்பின் புதிய செயல் அதிகாரியாக நியமிக்கப்பட தகுதியானவர்கள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த பட்டியலில் முக்கிய இடத்தில் இந்தியாவின் நீரஜ் அரோரா இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாட்ஸ்ஆப்பின் தற்போதைய வணிக செயல் அதிகாரியாக இருக்கும் இவர் வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ-ஆக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

நீரஜ் அரோரா கூகுள் நிறுவத்தில் பணிப்புரிந்து வந்தவர். டெல்லி ஐஐடி-யில் படித்தவர். 2011ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகி வாட்ஸ்ஆப்பில் இணைந்தார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார். பல வகையில் வாட்ஸ்ஆப்பின் வளர்ச்சியில் பங்கு வகிக்கும் நீரஜ் தற்போது அடுத்த சிஇஓக்கான பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். 

இவர் அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் உலகளவில் டெக் உலகில் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப் போட்டோஷாப்பை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பின் தலைமை பொறுப்பிலும் ஒரு இந்தியர் நியமிக்கப்படுவார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close