பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனங்கள் மீது அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்!

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 07:33 pm

ஆபாச வீடியோக்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்யாததால், கூகுள், பேஸ்புக், யாஹு உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2015ம் ஆண்டு ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரஜாவாலா என்ற அறக்கட்டளை நிறுவனம், சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்எல் தத்துவுக்கு கடிதம் அனுப்பியது. மேலும், இதற்கு ஆதராமாக இரண்டு வீடியோக்களையும் காண்பித்தது. பின்னர், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த வழக்கு கடந்த மாதம் 16ந்தேதி நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இணையத்தில் பரவி வரும் ஆபாச வீடியோக்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கி மனுதாக்கல் செய்யுமாறு அனைத்து சமூகவலைதளங்களுக்கும் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரையில் முன்னணி சமூகவலைதளங்கள் உட்பட எந்த நிறுவனமும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மனுதாக்கல் செய்யததை கண்டித்த கூகுள், யாஹு, பேஸ்புக் இந்தியா, மைக்ரோ சாப்ட், வாட்ஸ் அப் ஆகியவற்றுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close