10 வருஷமா ஒரே சம்பளத்தை வாங்கும் நல்லவர் அம்பானி!

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 05:36 am
mukesh-ambani-draws-just-rs-15-crores-as-salary

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, இந்த ஆண்டும் சேர்மன் என்ற முறையில் தான் பெறும் சம்பளத்தை உயர்த்தாமல் 15 கோடியிலேயே வைத்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, சம்பளம் மற்றும் இதர சலுகைகள் என ஆண்டுக்கு சுமார் ரூ.15 கோடி ரூபாய் பெறுவதாக அவரது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே சம்பளத்தை தான் கடந்த 10 ஆண்டுகளாக அவர் பெற்று வருகிறாராம். மற்ற நிர்வாகிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால், தனது சம்பளத்தை  உயர்த்தாமல் அவர் உள்ளாராம். 

கடந்த மார்ச் மாதம் வெளியான உலக பணக்காரர்கள் பட்டியலில், சர்வதேச அளவில் அம்பானி 19வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.2.7 லட்சம் கோடி ரூபாயாம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.1.14 லட்சம் கோடி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close