மாசு கட்டுப்பாடு விதிமீறல்; ஆடி சொகுசு கார் நிறுவன தலைவர் கைது!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 06:50 am
audi-ceo-arrested-in-emissions-scandal

டீசல் மாசுகட்டுப்பாட்டு தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, ஜெர்மனியின் ஆடி சொகுசு கார் நிறுவனர் தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆடி கார் நிறுவனத்தின் வாகனங்கள், அரசு பிறப்பித்த டீசல் மாசுகட்டுப்பாடு விதி மீறல்களில் ஈடுபட்டதாக வழக்கு நடந்து வருகிறது. தவறாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியதாக ஆடி நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில், சாட்சிகளை, ஸ்டாட்லர் கலைக்கக் கூடும் என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டத்தை தொடர்ந்து, அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

ஆடியின் தாய் நிறுவனமான வோக்ஸ்வாகன் தரப்பில் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஸ்டாட்லர் கைது செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து நிறுவனத்தின் போர்டு பேசி முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், "குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, சட்டப்படி அவர் குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close