21.5 கோடி ஜியோ பயனாளர்கள்: முகேஷ் அம்பானி தகவல் 

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 08:35 pm
reliance-jio-has-215-million-customers-says-mukesh-ambani

ரிலையன்ஸ் ஜியோவை 21.5 கோடி பேர் பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தின் பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்தார். 

ரிலையனஸ் நிறுவனத்தின் 41வது ஆண்டு பொது கூட்டம் இன்று நடைபெற்றது. சென்ற ஆண்டு கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ ஃபோனை அறிமுகம் செய்து வைத்தார். அதே போல இந்த ஆண்டு கூட்டத்தில் 1100 இந்திய நகரங்களுக்கான ஜியோ GigaFiber FTTH broadband சேவையை  அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது பேசிய அவர், "ரிலையன்ஸ் ஜியோ இரண்டே ஆண்டுகளில் 215 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. ஜியோவின் மூலம் மொத்தமாக 240 கோடி ஜிபி இன்டர்நெட் மாதந்தோறும் பயன்படுத்தப்படுகிறது. தொடக்கத்தில் இது 125 கோடியாக இருந்தது. 

மேலும் ஜியோ சேவையை பயன்படுத்தி ஒரு நாளுக்கு 250 கோடி நிமிடங்களுக்கும் மேல் பயனாளர்கள் மொத்தமாக மொபைலில் பேசுகிறார்கள். தற்போது உலகிலேயே இணைய சேவை வழங்குவதில் ஜியோ முதல் இடத்தில் உள்ளது. இது மட்டுமல்லாமல் ஜியோ போன் 25 மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஜியோ போனின் 2வது மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது" என்றார். மேலும் இந்த கூட்டத்தில் ஜியோவின் வீட்டு உபயோகப் பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close