கூகுள் நிறுவனத்துக்கு ரூ.35,000 கோடி அபராதம்!

  SRK   | Last Modified : 19 Jul, 2018 11:28 pm
eu-imposes-rs-35-000-crores-on-google

ஆண்ட்ராய்டு மொபைல்கள் மூலம் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதற்காக, கூகுள் நிறுவனத்தின் மீது, ஐரோப்பிய யூனியனின் போட்டி வளர்ச்சி கமிஷன் சுமார் 35,000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளை கடுமையாக விசாரித்து வரும் ஐரோப்பிய யூனியனின் போட்டி வளர்ச்சித் துறை, ஆன்லைன் வர்த்தகத்தில் கூகுள் மற்ற நிறுவனங்களை ஒடுக்குவதாக கூறி, ரூ.19,000 கோடி அபராதம் விதித்தது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு மொபைல்களை விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, கூகுளை தவிர மற்ற தேடுதல் சேவைகளை பயன்படுத்த முடியாத படி செய்து வருவதாக விசாரணை நடந்து வந்தது. கூகுளின் செயல்பாடுகளால், வெறும் 1% ஆண்ட்ராய்டு பயனாளர்கள் மட்டுமே வேறு தேடுதல் சேவைகளை பயன்படுத்துவதாக போட்டித்துறையின் கமிஷ்னர் மார்கரெட் வெஸ்டேகர் தெரிவித்துள்ளார். 

இதனால், 35,000 கோடி ரூபாய் அளவில் அபராதம் செலுத்த வேண்டும் என அவர் கூகுளுக்கு உத்தரவிட்டுள்ளார். முந்தைய வழக்கை போலவே, இந்த உத்தரவையும் எதிர்த்து கூகுள் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அந்நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close