190 கோடி வாடிக்கையாளர்கள்! யூடியூபின் அசைக்க முடியாத சாதனை 

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:17 pm
190-crore-customers-log-into-youtube-every-month

உலகிலேயே மிக பிரபல வீடியோ இணையதளமான யூடியூப்பை, ஒரு மாதத்திற்கு 190 கோடி தனி பயனாளர்கள் 'லாக் இன்' செய்து பயன்படுத்துகிறார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் தேடுதல் இணையதளத்திற்கு அடுத்து, உலகிலேயே அதிக பயனாளர்களை கொண்ட யூடியூப் இணையத்தளத்தின் தலைவர் சூசன் வோஸ்னியாக்கி, நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து வெளியிட்ட அறிக்கையில், தொலைக்காட்சி மூலம் யூடியூப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 18 கோடி மணி நேரம், வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சி மூலம் யூடியூப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாடிக்கையாளர்களை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் நேரடியாக தொடர்பு கொள்வதை தங்கள் நிறுவனம் 600% அதிகரித்து விட்டதாகவும் தெரிவித்தார். இதனால் கடந்த ஆண்டை விட சமூக வலைத்தளங்கள் மூலம் 30% வாடிக்கையாளர்கள் அதிகரித்து விட்டதாகவும் கூறினார். 

இந்தியாவில் மாதம் 22.5 கோடி பேர் யூடியூப்பை பயன்படுத்துவதாகவும், இங்கு இணைய சேவையை பயன்படுத்துவோரில், 80% பேர் யூடியூப்பை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2006ம் ஆண்டு, யூடியூப்பை கூகுள் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

 

Source: www.newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close