அமேசானில் ஷாப்பிங் செய்பவரா? உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி!

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2018 09:09 pm
amazon-staff-delete-bad-reviews-for-bribe

அமேசான் பணியாளர்கள், விற்பனையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுவிட்டு, அவர்களது பொருட்கள் மீது இருக்கும் மோசமான கமெண்ட்களை நீக்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது 

அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், அமேசான் நிறுவன ஊழியர்கள், சில விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இணைய வர்த்தக நிறுவனங்களில், எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன், அதற்கு மற்ற வாடிக்கையாளர்கள் கொடுக்கும் விமர்சனங்களை எல்லோரும் பார்ப்பது வழக்கம். இதன் மூலம் மோசமான பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களை பொதுமக்கள் புறக்கணிக்க முடியும்.

ஆனால், சீனாவில் உள்ள அமேசான் அலுவலக ஊழியர்கள், பல விற்பனையாளர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களது பொருட்கள் மீதுள்ள மோசமான விமர்சனங்களை நீக்கி வருகிறார்களாம். இதற்காக ப்ரோக்கர்கள் கூட செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த ப்ரோக்கர்கள், ஊழியர்களிடம் விற்பனையாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார்களாம். இதன் மூலம், தங்கள் பொருட்கள் மீதுள்ள மோசமான விமர்சனங்களை நீக்கி வருகிறார்கள். இதற்காக ஒரு ஊழியர் 300 டாலர் அதாவது ரூ.20,000 வரை லஞ்சமாக பெறுகிறார்களாம். 

இது குறித்து தொடர்ந்து எழுந்த புகார்களின் பேரில், அமேசான் நிறுவனம் உட்கட்ட விசாரணை நடத்தி வருகிறதாம்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close