ஜியோ ஃபோனில் வாட்ஸ்ஆப்பை எப்படி பயன்படுத்துவது? 

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 12:06 pm
whatsapp-and-reliance-jio-launch-campaign-on-how-to-use-whatsapp-on-jio-phone

ஜியோ ஃபோன்களில் வாட்ஸ்ஆப் வசதி அறிமுகப்படுத்தி உள்ள நிலையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இரு நிறுவனங்களும் இணைந்து  நாடு முழுவதும் பல நகரங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்த உள்ளன என்று செய்தி வெளியாகியுள்ளது.

ஜியோ ஃபோன்களில் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்தும் வசதி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வசதி ஜியோ செல்போனில் வந்திருப்பதை அடுத்து, அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ நிறுவனம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்த உள்ளது. 

இந்தப் பிரச்சாரம் வரும் 9ம் தேதி தொடங்க உள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நகரங்களில் இந்தப் பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவன செய்தித் தொடர்பாளர் பேசும் போது, "இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டை வளர்க்கும் முயற்சியில் ஜியோ நிறுவனம் இறங்கி உள்ளது. இதில் நாங்களும் ஒரு பகுதியாக இருப்பதை இணைந்து நினைத்து மகிழ்கிறோம்" என்று தெரிவித்து இருந்தார். 

மேலும் இந்த பிரச்சாரத்தின் போது வாட்ஸ்ஆப்பை எப்படி பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் பயன்படுத்துவது என்பது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனங்கள் இருக்கின்றன. மேலும் இதுகுறித்த வீடியோக்கள் 11 இந்திய மொழிகளில் தயாராகி உள்ளன. இவை இணையத்திலும் ஜியோ ஸ்டோரிலும் கிடைக்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close