• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

முதல் போயிங் மேக்ஸ் 8 விமானத்தை வாங்கியது ஸ்பைஸ்ஜெட்  நிறுவனம் 

  Newstm Desk   | Last Modified : 12 Oct, 2018 04:30 pm

spicejet-gets-first-boeing-737-max-from-22-billion-dollar-deal

பிரபல போயிங் நிறுவனத்திடம் இருந்து 205 பயணிகள் விமானத்தை வாங்க ஒப்பந்தம் போட்டுக்கொண்ட ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அதில் முதல் '737 மேக்ஸ் 8' விமானத்தை பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து 205 விமானங்களை வாங்க, இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. சுமார் ரூ.1,60,000 கோடி மதிப்பிலான (22 பில்லியன் டாலர்கள்) இதுவே, ஸ்பைஸ்ஜெட்டின் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். 

இதன்படி, 100 புதிய 737 மேக்ஸ் 8 விமானங்கள், 55 மேக்ஸ் விமானங்கள், மற்றும் 50 புதிய விமானங்களுக்கான உரிமம் பெறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, போயிங் நிறுவனம் தனது முதல் விமானத்தை இன்று ஸ்பைஸ்ஜெட்டிடம் டெலிவரி செய்துள்ளது. "போயிங்குடன் 22 பில்லியன் டாலர் மதிப்பிலான விமான ஒப்பந்தத்திற்கு ஸ்பைஸ்ஜெட் 2017ம் ஆண்டு வந்தது. அதன்படி, முதல் விமானம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது" என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. 

"இந்த புதிய விமானங்கள் மூலம், பல புதிய வழிகளில் எங்கள் சேவையை துவங்க முடியும். மேலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்க முடியும்" என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்தது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close