5 புதிய அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ஏர்டெல்!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:13 am
airtel-launches-5-packs-for-new-customers

புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் ஏர்டெல் நிறுவனம் 5 புதிய பிளான்களை வெளியிட்டுள்ளது. ரூ.178 முதல் ரூ.559 வரையிலான இந்த பேக்குகளில், அன்லிமிட்டட் கால், டேட்டா, ரோமிங் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே உள்ள கடும் போட்டியால், பல புதிய ஆஃபர்கள் தினம் தினம் வெளியிடப்பட்டு வருகின்றன. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டட் காலிங், தினம் 1 ஜிபிக்கும் மேற்பட்ட டேட்டா, ரோமிங் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டேட்டா பேக்குளின் விலை சமீப காலமாக தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது ஏர்டெல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவர 5 துவக்க பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த டேட்டா பேக்குகள் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.178 அன்லிமிட்டட் காலிங், தினம் 100 எஸ்.எம்.எஸ் மற்றும் தினம் 1 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ.229க்கு அதே சேவைகளுடன், தினம் 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படும். ரூ.344 பேக்கில் மேற்கண்ட சேவைகளுடன் தினம் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும்.

இவற்றுக்கும் மேலாக, ரூ.495 மற்றும் ரூ.559 பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அன்லிமிட்டட் கால், தினம் 100 எஸ்.எம்.எஸ், தினம் 1.4 ஜிபி டேட்டாவை, ரூ.495 பேக்கில் 84 நாட்களுக்கும், 559 பேக்கில் 90 நாட்களுக்கும் புதிய வாடிக்கையாளர்கள் பெறலாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close