ப்ளிப்கார்ட் தலைவர் பின்னி பன்சால் ராஜினாமா!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 03:21 am
flipkart-ceo-binny-bansal-resigns-after-misconduct-allegations

ப்ளிப்கார்ட் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் முறைகேடுகளில் எட்டுப்பட்டதாக அந்நிறுவனம் நடத்திய உட்கட்ட விசாரணையின் முடிவில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், பின்னி மற்றும் சச்சின் பன்சால் சகோதரர்களால் 2007ம் ஆண்டு துவக்கப்பட்டது. ப்ளிப்கார்ட், மிந்த்ரா, ஜபாங், போன்பே உள்ளிட்ட பல்வேறு தளங்களையும் நடத்தி வருகிறது ப்ளிப்கார்ட் குழுமம். முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும் பங்குகளை அமெரிக்க வர்த்தக நிறுவனமான வால்மார்ட் வாங்கியது. அதைத்தொடர்ந்து ப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால், அந்நிறுவனத்தை விட்டு விலகினார்.

தொடர்ந்து ப்ளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக பின்னி பன்சால் இயங்கி வந்தார். இந்நிலையில், பின்னி பன்சால் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ப்ளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் அவர் மீது உட்கட்ட விசாரணை நடத்தின. இந்த விசாரணையின் முடிவில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், பல்வேறு விவகாரங்களில் பின்னி பன்சால் தவறான முடிவுகள் எடுத்ததாக தெரிய வந்துள்ளதாம். அதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று பின்னி பன்சால் கூறியதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரியாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close