ஆப்பிள் மீது வாடிக்கையாளர்கள் புகார்: நடவடிக்கை எடுக்கவிருக்கும் அமெரிக்க நீதிமன்றம்?

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2018 01:11 pm
apple-will-tell-the-supreme-court-that-it-can-t-be-sued-by-iphone-users

ஐபோன்களில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோரில் ஆப்களின் விலையை அதிகரித்து விற்பதாக வாடிக்கையாளர்களின் புகாரின் பேரில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது. 

உலகில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனையில் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்தடுத்து பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை மைக்ரோசாஃப்டிடம், ஆப்பிள் நிறுவனம் இழந்துள்ளது. 

இந்நிலையில் ஆப்பிளுக்கு மற்றொரு சோதனை வந்துள்ளது. ஐபோன்களில் இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்கப்படும் ஆப்களின் விலை, அதன் உண்மையான விலையை விட அதிகமாக வைத்து விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். 

ஒரு ஆப்பின் விலையை விட 30 சதவீதம் விலையை உயர்த்தி ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. திங்களன்று நடந்த இந்த விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

இதற்கு பதில் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், ஆப்களுக்கு பயன்பாட்டாளர்களிடம் இருந்து பணம் பெறவில்லை என்றும், நேரடியாக டெவலப்பர்ஸ்களிடம் இருந்து தான் பணம் பெறப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பயன்பாட்டாளர்கள் கூற முடியாது. டெவலப்பர்ஸ்கள் தான் குற்றம் சாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஆப்பிள் ஐபோன்களில் உள்ள ஸ்டோரில் மட்டுமே ஆப்களை வாங்க முடியும். அதை தவிர்த்து ஆன்லைனில் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், ஜெயில்பிரேக்கிங் என்ற முறையை பயன்பாட்டாளர்கள் செய்ய வேண்டும். இதன் மூலம் ஐபோன்களில் வேறு இடத்தில் இருந்து ஆப்களை டவுன்லோட் செய்யலாம். ஆனால் ஜெயில்பிரேக்கிங் செய்வதன் மூலம் அந்த மொபைல் போன் வாரண்டி இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close