கூல்பேட் நிறுவனத்தின் அடுத்த சூப்பர் ஸ்மார்ட் போன்!

  Newstm Desk   | Last Modified : 19 Dec, 2018 05:34 am
coolpad-launched-3-smartphones-in-india

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான 'கூல்பேட்' அடுத்து புதிதாக மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராகி வருகிறது. இந்தியாவில் இந்த மொபைல் போன்கள் நாளை முதல் விற்பனைக்கு வருகின்றன.

சாம்சங், லெனோவா போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிறுவனம் கூல்பேட். 6,000 ரூபாய்க்கு அதிகபட்ச வசதிகளுடன் இந்த நிறுவனம் வழங்கி வந்த மொபைல் போன்களுக்கு பயங்கர வரவேற்பு இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த நிறுவனம் வெளியிட்ட மெகா 5A மொபைல், 7000 ரூபாய்க்கு சமீபத்தில் அறிமுகமானது. 

இந்த நிலையில் தன்னுடைய மெகா சீரியஸில், புதிதாக 3 மொபைல் போன் மாடல்களை வெளியிடுகிறது கூல்பேட். இவை இந்தியாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. "இந்தியாவில் மீண்டும் பெரிய அளவில் திரும்ப திட்டமிட்டுள்ளோம். இதற்காக எங்கள் 'மெகா' வரிசையில் 3 ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளோம். டிசம்பர் 20ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் போன்கள், கடைகளில் விற்பனைக்கு வரும்" என கூல்பேட் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close