ஜெட் ஏர்வேஸில் 700 கோடியை முதலீடு செய்ய தயாராகும் நரேஷ் கோயல்

  Newstm Desk   | Last Modified : 18 Jan, 2019 08:01 am
naresh-goyal-ready-to-invest-700-crores-in-jet-airways

ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் நரேஷ் கோயல், அந்நிறுவனத்தில் நிபந்தனைகளுடன் 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக எஸ்பிஐ தலைவர் ராஜ்னீஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் நரேஷ் கோயல், அந்நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்க தன்னுடைய பங்குகள் வைத்து, 700 கோடி ரூபாயை முதலீடு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் முதலீட்டுக்கு பிறகு தனது பங்குகள் 25 சதவீதத்தை குறையக் கூடாது என்ற நிபந்தனையுடன் மட்டுமே அதை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.பி.ஐ நிறுவன தலைவர் ராஜ்னீஷ் குமாருக்கு அவர் எழுதிய கடிதத்தில், கடும் நெருக்கடியான நிலையில் 700 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும், தன்னுடைய நிபந்தனைக்கான வாக்குறுதி தரப்படாவிட்டால், முதலீடு செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். எஸ்பிஐ உள்ளிட்ட இந்திய வங்கிகளிடம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 8,000 கோடி ரூபாய் கடன் பெற்றுத் திருப்பித் தராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close