அமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக களம் இறங்கும் ரிலையன்ஸ் 

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 12:56 pm
relaince-plans-to-launch-e-commerce-business


நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களைப் போல், ஆன்லைன் வர்த்தகத்திலும் கால் பதிக்க உள்ளது. 

‛ஆர் ஜியோ’ மற்றும் ‛ரிலையன்ஸ் ரீடைல்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து, புதிதாக இ - காமர்ஸ் சந்தையில் நுழைய உள்ளன. இது குறித்த அறிவிப்பை, ரிலையன்ஸ் நிறுவன அதிபர், முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். 

பொதுமக்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை, ஆன்லைனில் ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த துறையில், இந்திய சந்தையில், வெளிநாட்டு நிறுவனங்களான, அமேசானும், பிளிப்கார்ட்டும் முன்னிலை வகிக்கின்றன. 

பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் இந்த சந்தையில், ஆசியாவின் முன்னணி பணக்காரரும், இந்திய தொழில் அதிபர்களில் முன்னிலையில் உள்ளவருமான, முகேஷ் அம்பானியும் கால் பதிக்க முன்வந்துள்ளார். 

குஜராத்தில் நடந்து வரும், வைபரன்ட் குஜராத் மாநாட்டில், இது குறித்த முறையான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். முதலாவதாக, குஜராத்தில் துவங்கும் இந்த ஆன்லைன் வர்த்தகம், படிப்படியாக, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், 12 லட்சம் சிறு வியாபாரிகள் பலன் அடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் செய்யும் ஆர்டர்களை ஏற்று, சிறு வியாபாரிகளிடம் இருந்து அதை பெற்று, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இதனால், ஆன்லைன் வர்த்தகத்தில் போட்டி அதிகரித்து, தற்போதை விட, பொருட்கள் மீதான தள்ளுபடி மேலும் அதிகரிக்கும் என, வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close