பேஸ்புக் கேம்ஸ் விளையாடுகிறீர்களா? உங்கள் க்ரெடிட் கார்டு பத்திரம்!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 04:36 pm
facebook-tricked-users-to-spend-money-on-free-games

இலவச கேம்ஸ் என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றி, க்ரெடிட் கார்டு மூலம் பண மோசடி செய்ததாக பேஸ்புக் நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் கேம்ஸ் விளையாடுவது வாடிக்கை. இதில் அநேகமான கேம்கள், இலவசமானவை என்றாலும், பல கேம்களை பணம் கொடுத்து தான் விளையாட வேண்டும். வாடிக்கையாளர்களின் க்ரெடிட் கார்டு விவரங்களை பெற்றுக்கொள்ளும் பேஸ்புக், இலவச கேம்களை விளையாடுவோருக்கு தெரியமாலே, அவர்களின் க்ரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறது. 

இதுபோல பல வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக பேஸ்புக் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும்,  அந்நிறுவனத்தில் இருந்து லீக்காகி உள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், இதுதொடர்பாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்த போதும் அவர்களிடம் பணத்தை திருப்பி கொடுக்க பேஸ்புக் முன்வரவில்லையாம். க்ரெடிட் கார்டு நிறுவனங்கள் வலியுறுத்தலின் பேரிலேயே, அந்த பணத்தை பேஸ்புக் திருப்பி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 2010 முதல் 2014 வரை இதுபோல பேஸ்புக் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. 

குறிப்பாக, பேஸ்புக்கை பயன்படுத்தி 'நிஞ்சா சாகா' என்ற கேமை விளையாடிய ஒரு 12 வயது சிறுவனிடம் இருந்து 1000 டாலர்கள் அதாவது சுமார் ரூ.70,000 வரை அவருக்கு தெரியாமலே பேஸ்புக் வசூலித்ததாம். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள பேஸ்புக்,  இந்த வழக்கு குறித்த பரபரப்பில் மேலும் நெருக்கடியில் உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close