இதெல்லாம் ஒரு போட்டோவா? - ஐபோனை கேலி செய்யும் கூகுள்!

  Newstm Desk   | Last Modified : 29 Jan, 2019 05:59 pm
google-vp-makes-fun-of-apple-camera-performance

கூகுள் நிறுவனம் சமீபத்தில் பிக்சல் 3 மற்றும் 3XL என இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ள நிலையில், ஆப்பிளின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் ஐபோன் XS-சின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் கேலி செய்துள்ளது. 

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு, தனது பிக்சல் 3 மதுரம் மற்றும் 3XL  ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இதில் கூகுள் நிறுவனம், 'நைட் சைட்' எனப்படும் நவீன கேமரா தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதில், இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள், நவீன தொழில்நுட்பம் மூலம் பகலில் எடுத்து போல காட்சியளிக்கிறது. வெளிச்சமே இல்லாத இடத்தில் கூட நைட் சைட் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிறப்பாக தெரிவதால், கூகுள் நிறுவதனத்தை வாடிக்கையாளர்கள் பெரிதும் பாராட்டினர். 

இந்நிலையில், ஆப்பிளின் சிறந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும் 'ஐபோன் XS'ல் எடுத்த புகைப்படங்களை தனது பிக்சல் 3ல் எடுக்கப்பட 'நைட் சைட்' புகைப்படத்துடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் மார்வின் சவ். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close