இந்தியாவுக்கு வருகிறது ஜியோமி ஸ்போர்ட்ஸ் ஷூ!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 07:16 pm
mi-sports-shoe-2-introduced-in-india

ஸ்மார்ட்போன், டிவி, ஸ்மார்ட்பேண்ட் ஆகியவற்றை தொடர்ந்து, ஜியோமி நிறுவனம் ஆண்களுக்கான 'Mi ஸ்போர்ட்ஸ் ஷூ 2' என்ற நவீன ஷூக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனது Mi மொபைல்கள் மூலம், இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை அதிகப்படியாக கவர்ந்தது ஜியோமி நிறுவனம். சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உயர்ந்துள்ள ஜியோமி, டிவி, வாட்ச், ஷூ உள்ளிட்டவற்றிலும்  கால்களை பதித்தது. தற்போது அதன் ஸ்போர்ட்ஸ் ஷூ, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஜியோமி நிறுவனம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகப்படுத்தியது. அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஷூக்கள், ஒருவர் ஓடுவதை வைத்தே, சென்சார்கள் மூலம் எவ்வளவு நேரம் ஓடியுள்ளார்கள், என்பது போன்ற விவரங்களை கணக்கிட்டு சொல்லும். சீன வாடிக்கையாளர்களிடம் இந்த ஷூ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான 'ஸ்போர்ட்ஸ் ஷூ 2' என்றழைக்கப்படும் நவீன ஷூவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோமி. இதன் ஆரம்ப விலை 2,499 ரூபாய் என தெரிகிறது. உயர்தர பொருட்களால் உருவாக்கப் பட்டிருந்தாலும், இந்த ஷூக்களில், முந்தைய 'ஸ்மார்ட் ஷூ' போன்ற சென்சார் தொழில்நுட்பங்கள் கிடையாது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close