ஓலாவில் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹூண்டாய் - கியா மோட்டார்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 20 Mar, 2019 09:34 am
hyundai-and-kia-motors-invest-rs-2000-crores-in-ola

பிரபல ஆன்லைன் கேப் நிறுவனமான ஓலாவில் ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சுமார் 2,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய உள்ளன.

ஆன்லைன் கேப் சேவை நிறுவனமான ஓலா, ஊபர் நிறுவனத்துடன் கடும் போட்டியில் உள்ளது. சர்வதேச அளவில் ஆதிக்கம் கொண்ட ஊபருடன் போட்டியிட, தொடர்ந்து முதலீடுகளுக்காக ஓலா நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்த நிலையில் பிரபல கார் நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா மோட்டார்ஸ் கூட்டணி, ஓலாவில் சுமார் 300 மில்லியன் டாலர்கள், அதாவது 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை அதிகரிப்பதற்காக ஓலாவுடன் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. பல்வேறு புதிய முதலீடுகள் மூலம் இந்தியாவில் மின்சார கார் விற்பனையில் முன்னிலை பெற ஹூண்டாய் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. 

இந்த கூட்டணியின் மூலம், ஓலா நிறுவன டிரைவர்களுக்கு மின்சார கார்கள், நிதி கட்டமைப்பு, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு விதங்களில் உதவ ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 13 லட்சம் ஓலா டிரைவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close