இந்தியாவில் திணறி வரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்..!

  எஸ்.ஆர்.பி   | Last Modified : 02 May, 2019 01:26 pm
india-s-online-commercial-companies

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் வருமானம் சில ஆயிரம் கோடிகளை எட்டி இருந்தாலும்  இந்நிறுவனங்களின்  செலவு வருமானத்தை விட சில புள்ளிகள்  அதிகமாகவே உள்ளது. 

ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வருமானம் சென்ற நிதி ஆண்டில்ரூ. 24000 கோடியாகும். அதே நேரம் அந்த நிறுவனத்தின் செலவு  ரூ.25500 கோடி கிட்டதட்ட  ரூ.1550 கோடி நஷ்டம் இதேபோல அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 6000 கோடி நஷ்டம் என‌ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

சில ஆண்டுகளுக்கு முன் தன் இந்திய முதலீட்டை நிறுத்திகொண்ட இ-பே நிறுவனம் இந்தியர்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தயாராகவில்லை. பிட்'டிங் என சொல்லபடும் ஆன்லைன் ஏல முறை மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் இங்கு செயல்படவாய்பில்லை என்பதை அப்போது அந்த நிறுவனம் காரணமாகக் கூறியது. 

இந்தியர்கள் அதிகமாக விரும்பும் காஷ் ஆன் டெலிவரி என சொல்லப்படும், பொருளை பெற்று கொண்டு பணம் செலுத்தும் முறையானது ஆன்லைன் வர்த்தகத்தின் தோல்வியே. நெட் பேங்கிங், க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் உபயோகிக்கபடாததால் இ-காமர்ஸ் நிறுவனங்கள் வங்கிகள் உடனான கூட்டு வியாபாரத்தில் எந்த லாபமும் பெறமுடிவதில்லை. 

சந்தைபடுத்தும் செலவு, தள்ளுபடிகள், லாஜிஸ்டிகஸ் என சொல்லபடும் டெலிவரி செலவுகள் அடுத்தடுத்த காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் அமேசான் கிட்டதட்ட ரூ.2300 கோடியை விளம்பரங்களுக்கு செலவிட்டு இருக்கிறது. 

சமூகவலைதள விளம்பரங்களில் மட்டுமே மேற்கத்திய நாடுகளில் பல நிறுவனங்கள்  தங்களை சந்தைபடுத்தி கொள்கிறார்கள். இந்தியாவில் அது சாத்தியமாகவில்லை.  தொலைகாட்சி விளம்பரங்களுக்கு மட்டுமே பல கோடி ரூபாய்களை ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள் செலவிட வேண்டியுள்ளது. 

ஆன்லைன் நிறுவனங்கள் எண்ணற்ற பொருட்களை விற்கத் தயாராக இருந்தாலும் மொபைல் மற்றும் ஆடை வகைகளே ஆன்லைனில் அதிக அளவு விற்பனையாவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அனைத்து  நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சில பொருட்கள் மட்டுமே விற்பனையாகி வருவதால் நிறுவனங்களுக்கு இடையேயான தள்ளுபடி போட்டிகள் நிறுவனங்களை மேலும் நஷ்டத்தை நோக்கியே இழுத்துச் செல்கின்றன. 

சரக்குகளை‌ மொத்தமாக வாங்கி சந்தைபடுத்தும் முயற்சியில் இறங்கிய ஆன்லைன்  மளிகை வர்த்தக நிறுவனமான க்ரோபர்ஸ் நஷ்டத்தினால் தனது பிசினஸ் மாடல் என  சொல்லப்படும் தொழில் மாதிரியை மாற்றியமைத்துள்ளது. 

தள்ளுபடிக்காக மட்டும் ஆன்லைனில் வாங்குவதும் மேலும் முதல் பொருளை  வாங்கும்போது தரப்படும் தள்ளுபடியை பெற மொபைல் ஆப்'களை இன்ஸ்டால் செய்து  பொருட்களை வாங்கிய பிறகு அன் இன்ஸ்டால் செய்துவிடும் இந்தியர்களின்  பழக்கமும் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்குகிறது. 

வெறும் ஆன்லைன் வர்த்தம் மட்டுமே இந்தியாவில் எடுபடாது. கடை அல்லது ஸ்டோர் அதை சாரந்த ஆன்லைன் வர்த்தகமே லாபம் தரும் என்பது ப்யூச்சர் க்ருப் நிறுவனர் கிஷோர் போன்ற நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close