விளம்பரங்களை கிளிக் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு சன்மானம்:  பிஎஸ்என்எல் 

  எஸ்.ஆர்.பி   | Last Modified : 10 May, 2019 01:15 pm
click-ad-and-get-gifts-bsnl

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் வரும் விளம்பரங்களை, இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், அதற்கு சன்மானமாக டிஜிட்டல் வேலட் முலம் வருமானம் கிடைக்கும் வகையில், அந்த செயலி வடிவமைக்கபட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனங்களில் பொருட்கள் வாங்கும்போதோ சில ஆன்லைன் ஆப்களில் பொருட்கள் வாங்கும்போதோ இந்த டிஜிட்டல் வேலட் பணத்தை உபயோகபடுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

வாட்ஸ் ஆப் போன்ற சாட் வசதியும் இந்த ஆப்'பில் சேர்க்கபட்டுள்ளது. உலகம் முழுக்க உள்ள 44 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட எஸ்என்எல்' நிறுனத்துடன் ஒப்பந்ததில் இருந்து வரும் சேவை  நிறுவனங்களின் வைய்ஃபை ஹாட்ஸ்பாட்டை புதிய செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் உபயோகபடுத்திக் கொள்ள முடியும்.

மேலும் பேலன்ஸ், போஸ்ட் & ப்ரீபெயிட் பில் கட்டும் வசதியும் கொண்ட இந்த ஆப்பினை இதுவரை 5 மில்லயன் பயனாளிகள் தரவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close