குறைந்த விலையில் சாம்சங் கேலக்ஸி டேப் A7.0

  முத்துமாரி   | Last Modified : 08 Jan, 2018 03:05 am


மொபைல் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான சாம்சங் வெறும் ரூ.9,500-க்கு டேப்லெட் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு கேலக்ஸி டேப் A 2017 என்ற மாடலை அறிமுகம் செய்திருந்தது. இதனையடுத்து, இந்த ஆண்டு கேலக்ஸி டேப் A7.0 மாடலை  நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நேற்று முதலே அனைத்து சாம்சங் 

விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைத்தளமான அமேசான் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கேலக்ஸி டேப் A7.0 கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டுடன் ஜியோ இன்டர்நெட் சேவை பெரும் போது ரூ.2000 கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி டேப் A7.0- இன் அம்சங்கள் பின்வறுமாறு: 

- ஆண்ட்ராயிடு இயங்குதளம், 4G சேவை

- 7.0 இன்ச் அளவு

- 1.5 GB ரேம்

- 1.5 GHz குவாட்கோர் பிராசஸர்

- 8 GB இன்டெர்னல் மெமரி

- 200 GB வரை எக்ஸ்டெர்னல் மெமரி

- 5 எம்பி பிரைமரி கேமரா

- 2 எம்பி முன்பக்க கேமரா

- 4000 mAh பேட்டரி ( 9 மணி நேரம் வரை வீடியோ பார்க்கலாம்)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close