மைக்ரோமேக்ஸின் புதிய அறிமுகம் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 பிளஸ்

  Anish Anto   | Last Modified : 08 Jan, 2018 01:50 pm


மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிதாக  பாரத் 5 பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை தனது இணையதள பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விற்பனை அறிமுகம் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியிடப்பவில்லை.

ஆண்ட்ராய்டு (வெர்ஷன் தகவல் வெளியிடப்படவில்லை) இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த மொபைலில் 5.2 இன்ச் தொடுதிரை உள்ளது. குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார் கொண்ட இந்த மொபைல் 30% மின்திறனை சேமிக்க கூடியது. 3ஜிபி ரேம் உடன் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது.

83.3 டிகிரி அகன்ற கோணம் கொண்ட இதன் 5 MP முன்பக்க கேமரா மூலம் மிக தெளிவான குரூப் செல்ஃபிகளை எடுக்க முடியும். இதன் பின்பக்க கேமரா 8 MP திறன் கொண்டது. 5000mAh திறன் கொண்ட பேட்டரி 21 நாட்கள் ஸ்டாண்ட் - பை டைம் உடையது. மேலும் இதில் 4G VoLTE, வைஃபை, ப்ளூடூத் போன்றவையும் உள்ளன. குடியரசு தினத்தை ஒட்டி இந்த மொபைல் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close