நோக்கியா 3310 4ஜி போன் வந்தாச்சு....

  SRK   | Last Modified : 31 Jan, 2018 10:58 am


நோக்கியா நிறுவனத்தின் பிரபல பேசிக் மாடல் மொபைல் போன் 3310-வை 4ஜி தொழில்நுட்பத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் 2ஜி-யில் வெளியான இந்த மாடல் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்றது. பழைய நோக்கியா மொபைல்களை நினைவூட்டும் இந்த போன், பின்னர் 3ஜி-யில் வெளியிடப்பட்டது. தற்போது 4ஜி-யில் YunOS என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. 256MB ரேம், 512MB மெமரி இந்த மொபைலில் உண்டு. 64GB வரை மெமரி கார்டுகளை பயன்படுத்தலாம். 

1200mAh பேட்டரி திறன் கொண்டுள்ளதால் 4ஜி VOLTE-ல் 5 மணி நேரம் வரை பேச முடியும். ப்ளூடூத், வைஃபை, MP3 பிளேயர் வசதிகளுடன், 2 மெகாபிக்ஸல் கேமராவும் இதில் உள்ளது. 

தற்போது சீனாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போன், அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படும். அதன்பின்னர், மற்ற நாடுகளில் அதன் விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close