சாம்சங் S9, S9+ சிறப்பம்சங்கள்... அடுத்த சூப்பர் கேட்ஜெட்?

  SRK   | Last Modified : 27 Feb, 2018 09:55 am

உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில், சாம்சங் நிறுவனம் தனது S9 மற்றும் S9+ மாடல்களை அறிமுகப்படுத்தியது.

S7 நோட் போன்கள் வெடித்ததில் அந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட அவப்பெயரை, S8 மாடலின் மிகப்பெறிய வெற்றி மறக்கடித்துவிட்டது. இந்நிலையில், தனது அடுத்த பெரிய படைப்பாக S9 போனை விளம்பரப்படுத்தி வந்தது சாம்சங்.

ஸ்மார்ட்போன்களின் செயல்திறனில் உச்ச கட்டத்தை மொபைல் நிறுவனங்கள் எட்டி வருகின்றன.கேமரா முதல் மொபைல் பயன்படுத்தும் வேகம் வரை இனி, மிகச்சிறிய அளவே முன்னேற்றத்திற்கான வழி உள்ளது. அதனால், சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய படைப்பின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஐபோன் எக்ஸ் மொபைலுக்கு நேரடி போட்டியாக இந்த போன் களமிறங்குகிறது. S9 மொபைலில் 5.8 இன்ச் டிஸ்பிளேவும், S9+ மொபைலில் 6.2 இன்ச் டிஸ்பிளேவும் உள்ளது. ஐபோன் எக்ஸ்-சை போலவே இரண்டு மொபைல்களிலும், வைட் அங்கிள் மற்றும் டெலி போட்டோ அம்சங்கள் கொண்ட இரண்டு 12 மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா உள்ளது.

இதுவரை வெளியான அனைத்து மொபைல்களையும் விட, இதில் குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான படங்களை எடுக்க முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இதற்காக, இந்த மொபைலில் புகுத்தப்பட்ட நீவீன தொழில்நுட்பத்தை வைத்து, ஒவ்வொரு முறை படம் எடுக்கும் போதும், 12 படங்களாக அதை எடுத்து, அவை அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒன்றிணைத்து, ஒரே படமாக நமக்கு தருமாம். இதனால், பிக்சல்கள் தெரியாத அளவு ஆழமான புகைப்படங்களை எடுக்க முடியுமாம். மேலும், வெளிச்சத்திற்கு ஏற்றவாறு செயல்படும் இரட்டை அபெர்சர் வசதியும் இதில் உள்ளது.

இதுவரை ஸ்லோ மோஷனில் படங்களை எடுத்து வந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு, சாம்சங் இதில் சூப்பர் ஸ்லோ மோஷன் தொழில்நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. இது ஒரு வினாடிக்கு 960 பிரேம்களை படம்பிடிப்பதால், மில்லிசெகண்ட் அளவுக்கு ஸ்லோ மோஷனில் வீடியோக்களை பார்க்கலாம்.

அதிவேக செயல்திறனுக்காக சாம்சங் நிறுவனம் இந்த இரண்டு போன்களிலும், ஸ்நாப்ட்ராகன் 845, 2.8 GHz 8-கோர் ப்ராசசர் புகுத்தப்பட்டுள்ளது. ஐபோனின் 2.6 GHz 6-கோர் ப்ராசசரை விட இது வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எக்ஸ்-சில் அறிமுகப்படுத்தப்பட்ட முகத்தை பதிவு செய்து, போனை திறக்கும், ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தை போலவே சாம்சங் இதில் முயற்சி செய்துள்ளது. ஆனால், சாம்சங்கின் இந்த தொழில்நுட்பம், கம்மியான வெளிச்சத்தில் முகத்தை பதிவு செய்யாது என கூறப்படுகிறது. விரல் ரேகை சென்சாரில் எந்த மாற்றமும் இல்லாமல் பின்பக்கம் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த போன் சுமார் ரூ.55,000 முதல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.