கடந்த சில நாட்களாக வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் சில மெசேஜ்கள் ஸ்மார்ட் போனை செயலிழக்க வைப்பதாக தெரிகிறது.
வாட்ஸ்ஆப் நம் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பங்கி வகிக்க தொடங்கி விட்டது. தொலைபேசியில் அழைத்து பேசியது மாறி தற்போது அனைத்தையும் வாட்ஸ்ஆப் மூலமே பகிர்ந்து விடுகிறோம். அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றில் பிரச்னைகளும் அதிகமாவது தானே நிதர்சனம். அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் புதிய பிரச்னை ஒன்று உருவாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் மெசேஜ்கள் போனை செயலிழக்க வைத்துவிடுவதாக பலரும் கூறுகின்றனர். 'dont touch here' போன்று வரும் குறுஞ்செய்திகள் வழக்கமாக வாட்ஸ்ஆப்பில் வருபவை தான். ஆனால் இதனை விளையாட்டாக சில கோடர்கள்(Coders) உருவாக்கி பகிர்வர். இந்த மெசேஜ்களை ஸ்மார்ட் போன் ரீட் செய்ய தாமதமாகும். எனவே போன் சிறிது நேரம் செயலிழந்து விட்டதாக நினைத்துவிடுவோம்.
ஆனால் தற்போது If you touch the black point then your WhatsApp will hang என்ற மெசேஜுக்கு பின் கருப்பு புள்ளியுடன் dont touch here என்ற மெசேஜுகள் வருகின்றன. இதை தொட்டவுடன் வாட்ஸ்ஆப் செயலிழக்கிறது. இந்த மெசேஜ்கள் வாட்ஸ்ஆப்பின் டிசைனுக்கு எதிர்மறையான கோட்களை கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே இதனை தொட்டவுடன் செயலிழக்க வைக்கிறது. இதுபோன்ற மெசேஜ்கள் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் போன்களை தாக்குகின்றன.
இதே போல சில ஈமோஜிக்களும், This is very interesting போன்ற மெசேஜ்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மெசேஜ்கள் சில சமயம் ஸ்மார்ட் போனையே கூட செயலிழக்க வைத்துவிடும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதனை தொடாமலும் மற்றவர்களுக்கு பகிராமலும் இருப்பதும் மட்டுமே, இது போனை பாதிக்காமல் இருக்க ஒரே வழி.