இணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3

  திஷா   | Last Modified : 10 Jul, 2018 04:58 pm
xiomi-mi-max-3-features-leaked-in-youtube

இந்த மாத கடைசியில் வெளியாக இருக்கும் சையோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. 

யூ-ட்யூபில் வெளியான இந்த வீடியோவில், சையோமி மி மேக்ஸ் 3 ஃபோன் பிளாக் அண்ட் கோல்டு நிறத்தில் விற்பனைக்கு வர உள்ளது என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. மெட்டல் பேனல், டூயல் கேமராக்கள், ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர், ஆகியவை குறித்த விவரங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

முக்கியமாக இதன் டிஸ்ப்ளே 6.9 இன்ச் எனவும் தெரிய வந்திருக்கிறது. 5500mAh பேட்டரி,  12 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா, 5 மெகாபிக்ஸல் கொண்ட சென்சர் என இதன் அமைப்புகளும் வெளியாகியிருக்கின்றன. 

இந்த புதிய போன், தன்னுடைய தாய்நாடான சீனாவில் இந்த மாதம் வெளியாக இருந்தது. இந்நிலையில் இணையத்தில் வெளியான இதன் தகவல்கள், நிறுவனத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொன்னபடி இந்த மாதம் வெளியிடுவார்களா அல்லது, ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதே இப்போது 'கேட்ஜெட்ஸ் ஃப்ரீக்'குகளின் தலையாய கேள்வி. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close