குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப் படுத்திய ஓப்போ நிறுவனம்

  திஷா   | Last Modified : 16 Jul, 2018 12:54 am
oppo-s-new-model-budget-phone-for-youngsters

ஓப்போ நிறுவனம் தனது புதிய ஃபோனை அறிமுகப் படுத்தியுள்ளது. குறைந்த விலையில் அனைத்து வசதிகளையும் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனாக இதனை உருவாக்கியுள்ளது ஓப்போ நிறுவனம். ஓப்போ ஏ3எஸ் வகை ஸ்மார்ட் ஃபோனான அதன் விலை ரூ.10,990. 

இதில் 2 ஜிபி ரேம் மெமரி மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐ ஃபோன் 10 மாடல் போன்ற டிஸ்ப்ளேவும், 4230 mAH திறன் கொண்ட பேட்டரியையும் இதன் சிறப்பம்சங்கள். 

இதன் செஃல்பி கேமராவில் ஓப்போவின் AI பியூட்டி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 13 மெகாபிக்ஸல் மற்றும் 2 மெகாபிக்ஸல் கொண்ட பின்புற டூயல் கேமராக்கள் உள்ளன. இதனால் இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் சிறப்பாக இருக்குமாம். 


6.2 இன்ச் அளவிலான தொடு திரை இதில் உள்ளது. இசை பிரியர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில்,  சிறப்பான ஸ்பீக்கர்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதனால் இந்த போன் அதிக அளவில் இளைஞர்களைக் கவரும் என்று அந்நிறுவனத்தின் பிராண்ட் இயக்குநர் வில் யாங் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் ஃப்ளிப்கார்ட், பே டி.எம், அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்த ஃபோன் விற்பனைக்கு வரும் என்று ஓப்போ நிறுவனம் தரப்பில் அறிவிக்கப் பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close