வாடிக்கையாளர்களை கவர போட்டிப் போட்டுக் கொண்டு அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசுகின்றன தொலைத் தொடர்பு நிறுவனங்கள்.
தற்போது சந்தா செலுத்தியுள்ள பேக்கில் குறிப்பிட்டுள்ளதை விட நாளுக்கு இரண்டு ஜி.பி அளவுக்கு 4ஜி டேட்டா வழங்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ புதிய ஏட்-ஆன் பேக்கினை அறிவித்துள்ளது. ஆனால் இப்போதைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மட்டும் My Jio ஆப்பில் இச்சலுகையைப் பெற முடியும் . ஆனால் இந்த ஏட்-ஆன் பேக்கில் கூடுதல் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் சலுகைகள் எதுவும் இல்லை. இதன் வேலிடிட்டி ஜூலை 31-வரை மட்டுமே.
இந்தப் புதிய டிஜிட்டல் பேக்கோடு, ஜியோ வாடிக்கையாளர் ஒருவர் ரூ.399 பிளானுக்கு சந்தா கட்டியிருந்தால், அதில் அவர் வழக்கமாகப் பெறும் ஒரு நாளுக்கு 1.5 ஜி.பியுடன் 2 ஜி.பி சேர்த்து 3.5 ஜி.பி பயன்படுத்தலாம். ஆனால் ஜூலை-31 வரையே இச்சலுகை என்பதால் இதனால் பெரிதும் பயன் இருக்காது என்பது தான் இதில் வருத்தமே.