ஸ்மார்ட்போன் சண்டை: ஆப்பிளை வெச்சு செய்யும் சாம்சங்!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2018 04:46 pm
samsung-trolls-iphone-x-in-new-ad-campaign

உலகின்  மிகப்பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் ஆப்பிள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிக விலை ஸ்மார்ட்போன்களில் இரண்டு நிறுவனங்களும் என்னென்ன புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள் என்பது தான் இண்டஸ்ட்ரியின் ஹாட் டாக். 

வாடிக்கையாளர்கள் மத்தியில் ஐபோன் எக்ஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல, சாம்சங் S9, S9+ போன்ற போன்களும் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக சாம்சங் நிறுவனம் தனது 'கேலக்சி நோட் 9' ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. தனது நிறுவனத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த போனை பார்க்கும் சாம்சங், அதற்கான விளம்பரங்களில் ஐபோன் எக்ஸை கேலிக் கூத்தாக்கி வருகிறது. 

ஐபோனை விட வேகமாக செயல்படுவது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை கவரும் பல சூப்பர் ஃபீச்சர்ஸ்களையும் இந்த போன் கொண்டுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஐபோன் கடை ஊழியர் ஒருவர் நோட் 9 போனை போன்ற சிறப்புகளை எதிர்பார்க்கும் தனது வாடிக்கையாளர்களிடம் படாத பாடு படுவது போல இந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன. இன்ஜீனியஸ் என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த விளம்பரங்களில், சிலவற்றை நீங்களும் பார்த்து மகிழுங்கள்..

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close