மூன்று பிரைமரி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ7 !

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 10:33 pm
samsung-a7-launching-soon-with-3-primary-cameras

சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பின் கேமரா சென்சார்களை வழங்கியுள்ளது. 24 எம்.பி. பிரைமரி சென்சார், f/1.7 அப்ரேச்சர், 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 120 டிகிரி வைடு லென்ஸ், 5 எம்.பி. மூன்றாவது கேமரா லென்ஸ் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செல்ஃபிக்கள்  எடுக்க 24 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷும் இந்த புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் செல்ஃபி ஃபோக்கஸ், ப்ரோ லைட்டிங் மோட் மற்றும் ஏ.ஆர். எமோஜி உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஆகும். மெட்டல் ஃபிரேம் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. ஸ்கிரீன் அமைந்துள்ளது. 

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் புளு, பிளாக், கோல்டு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.29,385 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளில் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கபட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் மிகவிரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close