38,000 ரூபாய்க்கு வருகிறது 128ஜிபி OnePlus 6T!

  shriram   | Last Modified : 18 Oct, 2018 11:00 pm
oneplus-6t-128gb-memory-6-gb-ram-for-rs-37-999

பிரபல ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது அடுத்த நவீன ஸ்மார்ட்போனான ஒன்ப்ளஸ் 6T-யை வரும் இந்த மாத இறுதியில் வெளியிடும் என்றும், அதன் விலை ரூ.37,999 என இருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் உச்சகட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு மார்க்கெட்டில் வளர்ந்துள்ள ஒன்ப்ளஸ் நிறுவனம், தனது அடுத்த மாடலை வெளியிட தயாராகி வருகிறது. ஒன்ப்ளஸ் 6T என்ற இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலில், 6 ஜிபி ரேம், 128 ஜிபி உள் மெமரி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை, ரூ.37,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் 8 ஜிபி ரேம் மாடல், ரூ.40,999 இருக்கும் எனவும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி உள் மெமரி கொண்ட அடுத்த மாடல், ரூ.44,999 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ஸ்நாப்டிராகன் 845 ப்ராசசர், முன்பக்க கேமராவுக்காக, துளி போல மிகச்சிறிய நாட்ச் கொண்ட அமாலேட் டிஸ்பிளே, அதற்கு உள்ளேயே மறைந்திருக்கும் நவீன விரல் ரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. 

ஒன்ப்ளஸ் 6 மாடலின் விலை ரூ.34,999 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த மாடலை அறிமுகப்படுத்துகிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். நியூயார்க், புதுடெல்லி மற்றும் ஷென்ஜென் ஆகிய நகரங்களில் நடைபெறும் பிப்ரம்மாண்ட விழாவில், 6T மொபைல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close