ஜியோவின் அதிரடி தீபாவளி ஆஃபர்! ரீ- சார்ஜிற்கு 100% கேஷ்பேக்

  திஷா   | Last Modified : 22 Oct, 2018 02:51 pm
reliance-jio-diwali-offer

தீபாவளி பண்டிகை வருவதையொட்டி வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப ஆடைகள், நகைகள் வாங்க பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்திருக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, 100% கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின்படி, ரூ.1699-க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடம், அதாவது அடுத்த தீபாவளி வரை அன்லிமிடெட் கால் (உள்ளூர்/ வெளியூர்) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டதின் மூலம் 100 சதவீத கேஷ்-பேக்கும் பெறலாம். ஆனால் பணமாக அல்ல, கூப்பன்களாக! 

இதில் மூன்று ரூ.500 மற்றும் ஒரு ரூ 200-க்கான கேஷ்-பேக் கூப்பன் கிடைக்கும். அதாவது ரூ.1699 ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1700 கேஷ்-பேக்காக கிடைக்கும். இந்த கேஷ்-பேக் கூப்பன்களை ரிலையன்ஸ் டிஜிட்டலில் பொருட்கள் வாங்கும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் அதற்கு குறைந்த பட்சம் ரூ.5000 க்கு பொருள் வாங்க வேண்டும். டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த கூப்பன்களை உபயோகித்துக்கொள்ளலாம். 

இந்த பேக்கில், தினம் 100 குறுஞ்செய்தி அனுப்பும் வசதியுடன், நாளொன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா என மொத்தம் 547 ஜி.பி டேட்டா வழங்கப்படும். இந்த சலுகை அக்டோபர் 18 முதல் நவம்பர் 30-க்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மேலும், ரூ.149, ரூ.198, ரூ.299, ரூ.349, ரூ. 398, ரூ.399, ரூ.448, ரூ.449, ரூ.498, ரூ.509, ரூ.799, ரூ.999, ரூ.1999, ரூ.4999, ரூ.9999 ஆகிய ரீ சார்ஜ்களுக்கும் பொருந்தும். 

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close