புதிய ஐபேட், மேக்புக்கை அறிவிக்க தயாராகும் ஆப்பிள்!

  Newstm Desk   | Last Modified : 20 Oct, 2018 04:55 am
apple-gets-ready-to-unveil-new-ipad-and-macbook-air

உலகின் மிகப்பெரிய தொழிநுட்ப நிறுவனங்களுள் ஒன்றான ஆப்பிள், வரும் 30ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், புதிய ஐபேட், மேக்புக் ஏர் லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. 

ஐபோன், மேக், மேக்புக், ஐபேட் என பல கவர்ச்சிகரமான பொருட்களை வைத்து, சர்வதேச மார்க்கெட்டை அசத்தி வரும் ஆப்பிள் நிறுவனம், தனது புதிய படைப்புகளை வெளியிட தயாராகி வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற விழாவில், ஐபோன் Xs, Xs Max, Xr ஆகிய புதிய ஐபோன் மாடல்களை வெளியிட்டது ஆப்பிள். பிரபல ஐபோன் Xன் அடுத்தகட்ட வெர்ஷன் மொபைல்களான இவை, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. 

இந்நிலையில், எப்போதும்போல, அக்டோபர் 30ம் தேதி மேலும் பல புதிய படைப்புகளை வெளியிட ஆப்பிள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், புதிய ஐபேட், மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ உள்ளிட்ட பல பொருட்கள் வெளியிடப்படும். ஆப்பிளின் பட்ஜெட் லேப்டாப்பான மேக்புக் ஏர், இந்த விழாவில் புதிய வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன டிஸ்பிளே, அதிக பெர்பார்மன்ஸ் உள்ளிட்ட பல முன்னேற்றங்களை காணலாம் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது ஆப்பிள் மேக்புக் ஏர், ரூ.77,200-க்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close