மடிக்காமல் டேப்லட்...... மடித்தால் செல்போன்!- முதன்முதலாக ரொயோலோ அறிமுகம் 

  Padmapriya   | Last Modified : 06 Nov, 2018 03:35 pm

royole-debuts-world-s-first-commercial-foldable-smartphone

மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது.

மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் பணியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள 'ரொயோலோ' என்ற புதிய நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை 'பிளெக்ஸ்பை' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் விற்பனைக்கு வந்துள்ள இந்த திறன்பேசிக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இதனை முன்பதிவு செய்தவர்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரை, 8 சீரிஸ் சிப், முறையே 20, 16 எம்பி திறனுடைய கேமரா, 6000 mAH திறனுடைய பேட்டரி ஆகியவற்றைக் கொண்ட 'பிளெக்ஸ்பை' சீன தலைநகர் பெய்ஜிங்கில் கோலாகலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 

"மற்ற டேப்லட்களுடன் ஒப்பிகையில் தங்களது தயாரிப்பு பயன்பாட்டாளர்களுக்கு தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான, வேறுபட்ட அனுபவத்தை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளோம்" என்று இந்நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான பில் லியூ கூறியுள்ளார்.

தயக்கமே இன்றி குறைந்தது 20,000 முறை இதனை மடித்து பயன்படுத்தலாம் என்று ரொயோலே நிறுவனம் தெரிவிக்கிறது.  128ஜிபி மற்றும் 256ஜிபி பதிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இதன் தொடக்க விலை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.