19,999 ரூபாயில் பல ஆஃபர்களுடன் வரும் நோக்கியா 7.1!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2018 10:02 pm
nokia-7-1-to-go-on-sale-for-rs-19-999

நோக்கியா நிறுவனம் தனது அடுத்த புதிய ஸ்மார்ட்போன் 7.1-ஐ, 19,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த மொபைல் போன் டிசம்பர் 7ம் தேதி முதல் பல்வேறு ஆஃபர்களுடன் விற்பனைக்கு வருகிறது.

பிரபல நோக்கியா நிறுவனத்தின் பெயரில் ஹெட்ச்.எம்.டி குளோபல் என்ற நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. முன்னதாக இந்த நிறுவனம் வெளியிட்ட 6, 7, 8, சிரோக்கோ உள்ளிட்ட மொபைல்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தனது அடுத்த படைப்பை வெளியிட்டுள்ளது. நோக்கியா 7.1 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை, இந்தியாவில் 19,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 3ஜிபி ரேம், 32 ஜிபிபி உள் மெமரியுடன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைல் போன், தற்போது இந்தியாவுக்கு 4 ஜிபி ரேம், 64 ஜிபி உள் மெமரியுடன் வருகிறது. இந்த மொபைலில், 5.84 இன்ச் அளவு கொண்ட அதிநவீன பியூர்வியூ டிஸ்ப்ளே தொழில்நுட்பம் உள்ளது. மேலும் இதில் பிரபல ஸைஸ் தொழில்நுட்பம் கொண்ட 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்ஸல் என இரட்டை பின்பக்க கேமரா உள்ளது. முன்பக்கம், 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. ஸ்நாப்டிராகன் 636 ப்ராசசர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 3060mAh பேட்டரி திறன் இதில் உள்ளது. 

இந்த மொபைலை வெளியிடும்போது, ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ஒரு TB வரை 4ஜி டேட்டா சேவைகளை அன்லிமிட்டட் பேக்குகள் மூலம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள், 499 ரூபாய்க்கும் மேலான பிளான்கள் வைத்திருந்தால், அவர்களுக்கு120 ஜிபி டேட்டா, 3 மாதங்கள் நெட்ப்ளிக்ஸ், மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்புகள் கிடைக்குமாம். இது மட்டுமல்லாமல், கடைகளுக்கு சென்று நேரடியாக மொபைலை வாங்குபவர்களுக்கு, எச்டிஎப்சி கிரெடிட் கார்டு டெபிட் கார்டு மூலம், 10% கேஷ்பேக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close