டூயல் டிஸ்பிளேவுடன் வெளியாகும் விவோ போன்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Dec, 2018 02:41 am
funky-two-screen-design-means-the-vivo-nex-2-should-catch-your-eye

பிரபல சீன மொபைல் நிறுவனமான விவோ டூயல் டிஸ்பிளேவுடன் கூடிய புதிய மாடலான நெக்ஸ் 2 என்ற மாடலை வெளியிடவுள்ளது. 

அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் தினம்தினம் புது தொழில்நுட்பங்களுடனும், அப்டேட்களுடனும் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக சீன மொபைல் நிறுவனங்களே இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ளன எனலாம். சீன மொபைல் இந்தியாவை வியாபார நோக்கத்திற்காக ஆட்டிப்படைத்துவரும் நிலையில் ஸ்மார்ட் போன்கள் மனிதர்களை பொழுது போக்கிற்காக ஆட்டிப்படைத்து வருகிறது. 

அந்தவகையில் அண்மையில் பிரபலமாகிவரும் விவோ நிறுவனம் 2 டிஸ்பிளேவுடன் கூடிய புதிய மாடலை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு டிஸ்பிளேவை தானே பார்க்க முடியும். 2 டிஸ்பிளேவை வைத்துக்கொண்டு ஒரே நேரத்தில் எப்படி இயக்கமுடியும் என்ற சந்தேகம் எழும். ஆனால் 2 டிஸ்பிளே மட்டுமல்லாது 3 கேமராவையும் இந்த விவோ பெற்றுள்ளது. இதன்மூலம் இருட்டிலும் மிக துல்லியமாக போட்டோவை எடுக்கலாம். இதன் விலை 35, 000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் 6.22' இன்ச் எச்.டி பிளஸ் உடன் கூடிய 720x1520 பிக்ஸல் கொண்ட 19:9 விகித டிஸ்பிளே, 3ஜிபி ரேம் மற்றும் 34ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு ஆகிய சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. ஆக்டா கோர் மீடியாடெக் MT6762 சிப்செட், மைக்ரோ எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கம், ஃபண்டச் ஓ.எஸ். 4.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம், ஃபிங்கர் பிரிண்ட், சென்சார் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close