48 மெகாபிக்சல் கேமரா; புதிய ஹானர் போன்

  Newstm Desk   | Last Modified : 11 Dec, 2018 03:46 am
honor-displays-48-megapixel-view-20-mobile

சீன மொபைல் நிறுவனமான ஹானர், 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் முகப்பு முழுவதும் டிஸ்ப்ளே கொண்ட 'View20' என்ற அதிநவீன புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல சீன நிறுவனமான ஹுவேய்யின் கிளை நிறுவனமான ஹானர், பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்தியாவில் சமீப காலத்தில் ரெட்மி, சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக மார்க்கெட்டில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து உள்ளது ஹானர்.

அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட P20 pro, P20 MATE போன்ற விலையுயர்ந்த மொபைல்களின், கேமராக்கள், ஐபோனுக்காக இணையாக பேசப்பட்டது. பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தனது கேமராக்களிலும் மொபைலிலும் புகுத்தி வரும் ஹானர், புதிதாக முழுக்க முழுக்க டிஸ்ப்ளேவை கொண்ட வியூ20 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மொபைலின் பின்பக்கம் 48 மெகாபிக்சல் கொண்ட அதிநவீன கேமரா உள்ளது. இதன் முன்பக்கம் முகப்பில் எந்த இடைவெளியும் இல்லாமல் முழுக்க முழுக்க டிஸ்ப்ளே இருக்குமாறு வடிவமைத்துள்ளனர். முன்பக்க கேமராவை, டிஸ்ப்ளேவுக்கு அடியிலேயே வைத்து மிகவும் கவர்ச்சிகரமாக இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிநவீன பிராசசர், AI தொழில்நுட்பம் கொண்ட கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close