மடங்கும் ஐபேட்; கூலாக பதில் சொல்லும் ஆப்பிள்!

  Newstm Desk   | Last Modified : 23 Dec, 2018 05:16 am
ipad-pro-bends-apple-says-won-t-recall

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட புதிய ஐபேட் ப்ரோ டேப்லட், லேசாக அழுத்தம் கொடுத்தாலே மடங்குவதாக ஏற்பட்ட சர்ச்சைக்கு ஆப்பிள் நிறுவனம், "ஐபேட் மிக உயர்ந்த தரம் வாய்ந்தது, அதனால் வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம்," என தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபேட் ப்ரோ, டேப்லட், ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையை கிளப்பியது. சுமார் ரூ.70,000 கொடுத்து வாங்கிய புதிய ஐபேட்டை வாடிக்கையாளர்கள் திறந்து பார்த்த போது, அது லேசாக வளைந்திருந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இணையத்தளத்தில் இதுகுறித்த பல புகார்கள் வலம்வர துவங்கின. 

மொபைல் போன்கள் மற்றும் டேப்லட்களை பற்றிய பல யூடியூப் சேனலில்கள் இதை உறுதி செய்தனர். ஐபேட் ப்ரோவின் வடிவமைப்பு லேசாக மடங்குவதற்கு இடம் கொடுப்பதாகவும், இதை அந்நிறுவனம் சரி செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர். இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருசில ஐபேட்கள் வாடிக்கையாளர்களை சென்றடையும் போதே, லேசாக வளைந்திருந்ததை ஒப்புக்கொண்டது. ஆனால், வளைந்த ஐபேட்களை தானாகவே திரும்பப்பெற வாய்ப்பில்லை என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபேட்டின் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லையென்றும், நவீன தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்டதாகவும் ஆப்பிள் உறுதியளித்தும் உள்ளது. 

இந்நிலையில், 14 நாட்களுக்குள் வாங்கிய பொருட்களில் குறைபாடு இருந்தால் அதை திருப்பி கொடுக்கலாம் என்ற ஆப்பிள் நிறுவனத்தின் சலுகையை பயன்படுத்தி பல வாடிக்கையாளர்கள் ஐபேட்களை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close