100 கோடி வாடிக்கையாளர்களை தொட்டது கூகுள் 'டுவோ'!

  Newstm Desk   | Last Modified : 24 Dec, 2018 12:10 am
google-duo-crosses-1-billion-mark

கூகுள் நிறுவனம் இரு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய வீடியோ சாட்டிங் ஆப் கூகுள் டுவோ-வை, 100 கோடி முறைக்கும் மேல் வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்துள்ளனர். 

உலகின் மிகப்பெரிய இணைய நிறுவனமான கூகுள், கடந்த 2016ம் ஆண்டு, இரண்டு புதிய ஆப்களை வெளியிட்டது. அல்லோ என பெயரியிடப்பட்ட சாட்டிங் ஆப்பை, வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு போட்டியாக கூகுள் வெளியிட்டது. அதேபோல, கூகுள் டுவோ என்ற ஆப்பை, ஸ்கைப், பேஸ்புக் வீடியோ சாட் ஆப்களுக்கு போட்டியாக வெளியிட்டது. 

அல்லோ ஆப், வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதால், சமீபத்தில் அதை நிறுத்த முடிவெடுத்தது கூகுல். தனது முழு கவனத்தையும், டுவோ மீது செலுத்த உள்ளதாக கூகுள் தெரிவித்தது. இந்நிலையில், கூகுள் டுவோ ஆப், தற்போது 100 கோடி முறை டவுன்லோடு செய்யபட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னால் தான், கூகுள் டுவோ ஆப், 50 கோடி டவுன்லோடுகளை தொட்டது. இந்த குறுகிய காலத்தில், அதை இரட்டிப்பாக்கியுள்ளது, பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close