சரிந்த ஐபோன் விற்பனை; வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் குறைகிதா?

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 05:54 am
iphone-sales-go-down-tim-cook-blames-week-demand

ஐபோன் மொபைலின் மூலம் ஆப்பிள் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாய் 9 பில்லியன் டாலர் அளவில் குறைந்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஐபோன் வாங்க ஆர்வம் குறைந்து வருவதே காரணம் என கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வருவாய், முதல் காலாண்டில், எதிர்பார்த்ததைவிட 9 பில்லியன் டாலர்கள் (ரூ.63,000 கோடி) சரிந்துள்ளது. தனது ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் எழுதிய கடிதத்தில், வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஐபோன் வாங்க ஆர்வம் குறைந்துள்ளதால் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2017 இறுதியில், ஐபோன் வாடிக்கையாளர்கள், புதிய அப்டேட்களைப் பதிவு செய்தவுடன் தங்களது போன்களின் வேகம் குறைவதாக குற்றம் சாட்டினர். வேண்டுமென்றே பழைய போன்களின் வேகத்தை குறைப்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய நாடுகள், கடும் அபராதம் விதித்தன. இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கோபத்தை தணிக்க, அதிக விலைக்கு விற்று வந்த ஐபோன் பேட்டரியை, ஒரு ஆண்டு காலத்திற்கு பாதி விலைக்கு கொடுக்க ஆப்பிள் முடிவெடுத்தது. இதனால் வாடிக்கையாளர்கள், பழைய போன்களுக்கு புதிய பேட்டரிகளை மட்டும் வாங்கி, புதிய ஐபோன்கள் வாங்குவதை தவிர்த்து வந்தனர். அதனாலேயே ஐபோன் நிறுவனத்தின் வருவாயில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்துள்ளார்.

ஆனால், பல வாடிக்கையாளர்கள், ஐபோனின் கடும் விலை தான் இதற்கு காரணம் என தெரிவித்துள்ளனர். ஐபோனுக்கு இணையான பெர்பார்மன்ஸை, பாதி விலைக்கு 'ஒன்ப்ளஸ் 6T' போன்ற மொபைல்கள் தருவதாலும், சீனாவில் ஹுவெய் போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதும் இதற்கு முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close