இரண்டாக உடைகிறது ஜியோமி நிறுவனம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jan, 2019 05:47 pm
xiaomi-and-redmi-to-split

பிரபல சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோமி, தனது புகழ்பெற்ற ரெட்மி மொபைல்களை தனி நிறுவனமாக்கி, இரண்டாக பிரிய முடிவெடுத்துள்ளது. 

சீனாவை சேர்ந்த ஜியோமி ஸ்மார்ட்போன் நிறுவனம், தனது ரெட்மி மொபைல்கள் மூலம் இந்தியாவில் கால் பதித்தது. வெறும் 6,000 ரூபாயில், விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு வந்த சேவைகளை ரெட்மி தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தது. இதனால், குறைந்த காலத்தில், சேம்சங், போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக உருவெடுத்தது ரெட்மி. 

தற்போது ஜியோமி நிறுவனம், ரெட்மி மட்டுமல்லாமல் Mi என்ற பெயரில்வெளியிட்டு வரும் போதிய மொபைல்கள் மூலம் ஐபோனுக்கே போட்டி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ரெட்மியை தனி நிறுவனமாக்க ஜியோமி முடிவு செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் அடுத்ததாக ரெட்மி 7 எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. 48 மெகாபிக்ஸல் கேமரா கொண்ட இந்த மொபைல் மீது அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது.

"ரெட்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதிலும், ஜியோமி நிறுவனம், விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பிலும் ஈடுபடும்" என ஜியோமி தலைவர் லெய் ஜுன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close