ரெட்மி நோட் 5 ப்ரோ விலை அதிரடி குறைப்பு!

  shriram   | Last Modified : 08 Jan, 2019 04:04 pm
redmi-note-5-pro-price-dropped

ஜியோமி நிறுவனத்தின் பிரபல ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன், இந்திய வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது  1,000 ரூபாய் விலை குறைந்து, ரூ.12,999 விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களில் அதிக வரவேற்பை பெற்ற மொபைல்களில் ஒன்று ரெட்மி நோட் 5 ப்ரோ. ரூ.13,999க்கு வெளியான இந்த மொபைல், இந்திய வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 4ஜிபி ரேம் கொண்ட மொபைல், ரூ.13,999க்கும், 6ஜிபி ரேம் கொண்ட மொபைல் ரூ.16,999க்கும் அறிமுகமானது. கடந்த ஆண்டு சில வரி கொள்கைகள் மாற்றப்பட்டதால், இரண்டு மொபைல்களின் விலையும் ஏற்றஇறக்கத்தை சந்தித்தன.

தற்போது இந்த இரண்டு மொபைல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் மொபைலின் விலை ரூ.1000 குறைந்து, ரூ.12,999க்கும், ரூ.15,999க்கு விற்பனையாகி வந்த 6ஜிபி ரேம் மொபைலின் விலை ரூ.2000 குறைந்து, ரூ.13,999க்கு விற்கவுள்ளதாக ரெட்மி தெரிவித்துள்ளது. 

நோட் 5 ப்ரோ மொபைலில் 5.99 இன்ச் ஸ்க்ரீன், 12 மற்றும் 5 மெகாபிக்ஸல் இரட்டை பின்பக்க கேமரா; 20 மெகாபிக்ஸல் முன்பக்க கேமராவும் உள்ளது. 64 ஜிபி உள் மெமரி, மெமரி கார்டு வசதி, 4 அல்லது 6 ஜிபி ரேம், 4000 mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளிட்டவை உள்ளன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close