மடங்கும் டிஸ்பிளேயுடன் மோட்டரோலாவின் ப்ளிப் போன்!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 06:23 am
motorola-flip-phone-to-be-introduced-soon

மோட்டரோலா நிறுவனம் தனது பிரபல ப்ளிப் மாடலான ரேஸர் போனின் வரிசையில், நவீன ஸ்மார்ட்போனை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல மொபைல் நிறுவனமான மோட்டரோலா, 2000களில் பல ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்தது. மடங்கும் தொழில்நுட்பத்துடன் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக பல ப்ளிப் மாடல்களை வெளியிட்டு, நோக்கியா, சோனி போன்ற முன்னணி போன்களுக்கு கடும் போட்டி அளித்தது மோட்டரோலா.

2004ம் ஆண்டு, மோட்டரோலா வெளியிட்ட ரேஸர் V3 என்ற மொபைல் போன், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்ட இந்த போன், மோட்டரோலாவின் வரலாற்றிலேயே அதிகம் விற்பனையான போனாகவும் உருவெடுத்தது. 1.3 கோடி ரேஸர் V3 மொபைல்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தனது பழைய ரேஸர் மொபைல்களை களமிறக்க மோட்டரோலா தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

முன்பு போலவே, மடங்கும் மாடலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதன் டிஸ்ப்ளேயும் மடங்கும் நவீன தொழில்நுட்பம் கொண்டதாக வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மொபைலின் விலை 1500 டாலர்கள் அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மோட்டரோலா அறிமுகப்படுத்துகிறதோ இல்லையோ, இந்த ஆண்டு இனி பல மடங்கும் போன்கள் வெளியாகும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close