விண்டோஸ் போன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி!

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 04:50 pm
microsoft-to-end-support-for-windows-phones

மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விண்டோஸ் சாப்ட்வேர் கொண்ட மொபைல்களுக்கு இனி எந்தவித அப்டேட்டும் வெளியிடப்படாது என்றும், விண்டோஸ் மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வேறு மொபைல்களுக்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விண்டோஸ் சாப்டவேர் மூலம் உலகில் கோடிக்கணக்கான கணினிகளில் இடம் பிடித்ததை போலவே, மொபைல் போன்களுக்கென விண்டோஸ் சாப்ட்வேரை வெளியிட்டு நோக்கியா, போன்ற மொபைல் நிறுவனங்களின் மொபைல்களில் செயல்பட்டு வந்தது. கூகுளின் ஆண்டிராய்டு சாப்டவேரை வாடிக்கையாளர்கள் பெருமளவு விரும்பி வரும் நிலையில், விண்டோஸ் மொபைல்களுக்கு வரவேற்பு குறைந்து விட்டது.

இதனால், விரைவில் விண்டோஸ் மூலம் இயங்கும் மொபைல்களுக்கு இனி அப்டேட்கள் வெளியிடப்படாது என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் மொபைல் சாப்டவேரை முற்றிலும் இழுத்து மூடவுள்ளதாகவும், வரும் டிசம்பர் மாதம் 10ம் தேதி, முதல் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உதவியும் தங்களிடம் இருந்து கிடைக்காது என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் மொபைல் வாடிக்கையாளர்கள், ஐபோன், ஆண்டிராய்டு போன்ற மொபைல்களை வாங்கவேண்டும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close