நீங்க ஐபோன் வச்சுருக்கீங்களா? ஆப்பிள் நிறுவனத்தின் பரிசைப் பெற அரிய வாய்ப்பு!

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 03:02 pm
apple-asks-iphone-users-to-share-best-photos

ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு 'ஷாட் ஆன் ஐபோன்' என்ற சேலஞ்சை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோனில் எடுத்த சிறந்த புகைப்படத்தை அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளது. 

பிரபல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் 'ஐபோன் சிறந்த புகைப்படம்' என்ற போட்டியை நடத்துகிறது. இதற்காக  'ஷாட் ஆன் ஐபோன்' என்ற சேலஞ்சை அறிவித்துள்ளது. அதாவது ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது போனில் எடுத்த மிகச்சிறந்த புகைப்படத்தினை அனுப்பி வைக்கலாம். உலக அளவில் பயனாளர்கள் கலந்துகொள்ளும் இந்த போட்டியில் சிறந்த 10 புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த புகைப்படத்தை எடுத்த நபருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும், இந்த புகைப்படங்கள் உலகின் முக்கிய நகரங்களில் ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் தளத்தில் இடம் பெறும். 

ஜனவரி 22 முதல் பிப்ரவரி 7 வரை வாடிக்கையாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இந்த போட்டியில் பங்கேற்க, ஐபோனில் தாங்கள் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில் #ShotOniPhone என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட வேண்டும். தாங்கள் எடுத்த புகைப்படத்தை ஆப்பிள் போனில் உள்ள எடிட்டிங் கருவிகள் அல்லது ஆப்-கள் மூலம் எடிட் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ட்விட்டரில் #ShotOniPhone என்ற ஹேஷ்டேக்கில் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close