பியூட்டி கேமரா ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்..? ஜாக்கிரதை

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 06:50 am
google-removes-29-beauty-camera-apps-from-play-store

வாடிக்கையாளர்களின் விவரங்களை திருடுவது, ஆபாச படங்களை பரப்புவது போன்ற காரணங்களுக்காக, கூகுள் நிறுவனம், ஆண்டிராய்டு மொபைல்களுக்கான தனது பிளே ஸ்டோரில் இருந்து, 29 'பியூட்டி கேமரா' ஆப்களை, நீக்கியுள்ளது.

புகைப்படங்களை அழகாக மெருகேற்றும் 'பியூட்டி கேமரா' ஆப்கள், கடந்த சில ஆண்டுகளில் பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பிரபலமாகியுள்ளன. இதுபோல பல்வேறு நிறுவனங்கள், புதிய ஆப்களை உருவாக்கியுள்ள நிலையில், அதில் பல ஆப்கள், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, தனியார் நிறுவனங்களுக்கு விற்பதாக புகார்கள் எழுந்ததன. மேலும், ஆபாச விளம்பரங்களை சில ஆப்கள் பரப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. கூகுள் நிறுவனம், இதுபோல 29 ஆப்களை கண்டறிந்து, அவற்றை தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

இதுபோன்ற ஆப்களை சாதாரணமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, அதில் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை. ஆனால் அந்த ஆப்பை நீக்க முயற்சி செய்யும்போது, பல்வேறு pop-up விளம்பரங்களைக் திறந்து, அதன் மூலம் தகவல்களை திருடும் இணையதளங்களுக்கு நம்மை திருப்பி விடுவது, ஆபாச படங்கள் கொண்ட ஆப்களை மொபைலில் பதிவு செய்வது, உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றன, என கூகுள் எச்சரித்துள்ளது . 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close