வாட்ஸ் ஆப் அழைப்பை ரெக்கார்ட் செய்வது எப்படி?

  Newstm Desk   | Last Modified : 11 Feb, 2019 04:38 pm
how-to-record-whatsapp-call

உலகில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பெற்றுள்ள வாட்ஸ் ஆப்பில் அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகள், அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் அழைப்பை எப்படி ரெக்கார்ட் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். 

வாட்ஸ் ஆப் அழைப்பை பதிவு செய்வது மூன்றாவது நிறுவன ஆப்- உடன் தான் செயல்படுத்த முடியும். இதற்காக நமது மொபைல் பிளே ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன.

அவற்றில் முக்கியமாக, உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்த கூடிய ஒன்று தான் 'க்யூப் கால் ரெக்கார்டர்'. இதனை எப்படி உபயோகிப்பது? 

நமது மொபைல் பிளே ஸ்டோரில், 'க்யூப் கால் ரெக்கார்டர்' என்ற ஆப்பை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும். 

பின்னர் 'நெக்ஸ்ட்' என்பதை கிளிக் செய்தவுடன் ஆப் பெர்மிஷன் என்ற விண்டோ திறக்கும். அதனை 'agree' செய்யவும். 

தொடர்ந்து 'Grant Permission' என்பதை கிளிக் செய்யவும். உங்களது கான்டக்ட்ஸ், போட்டோஸ், ஆடியோ தகவல்களை ஷேர் செய்ய 'allow' கொடுக்க வேண்டும். இது கால் ரெக்கார்டர் ஆப் என்பதால் நீங்கள் இதற்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே கால் ரெகார்ட் ஆகும். 

பின்னர் 'continue' கிளிக் செய்து விட்டு போனில்  'Auto start recorder' என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன்மூலமாக வாட்ஸ் ஆப்பில் உங்களது அழைப்புகள் அனைத்தும் இதில் தானாகவே சேமிக்கப்படும். இதன் பின்னர் நீங்கள் வாட்ஸாப்பில் கால் செய்யும் போது, அதில் வலதுபுறத்தில் ஆடியோ போன்ற ஒரு குறியீடு இருக்கும். இதன்மூலம் கால் ரெக்கார்டு ஆகும். 

பின்னர் 'Cube ACR' ஆப்பில், சேமிக்கப்பட்ட உரையாடல்கள் இருக்கும். அதில், உங்களை தேவையில்லாத உரையாடல்களை நீங்கள் நீக்கி விடலாம். 

தற்போது வழக்கமான மொபைல் அழைப்புகளை வாட்ஸ்ஆப்பில் அழைப்பது அதிகரித்துள்ளதால் இந்த கால் ரெக்கார்டர் பலருக்கு அதிகமாக பயன்படுகிறது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close